செய்திகள்

10 பேர் இரட்டை குடியுரிமைக்கு விண்ணப்பம்

 இரட்டை குடியுரிமைக்கு விண்ணப்பிக்கலாம் என்ற இலங்கை அரசாங்கத்தின் அறிவிப்பை அடுத்து இதுவரை 10 பேர் விண்ணப்பம் செய்துள்ளதாக குடிவரவு மற்றும் குடியகல்வு திணைக்களம் தெரிவித்துள்ளது.

முன்னைய அரசினால் செப்டம்பர் 2011 இல் இரட்டை குடியுரிமை இடைநிறுத்தப் பட்டிருந்த நிலையில் அந்த நடைமுறையை மீள ஆரம்பிப்பதாக பொதுமக்கள் ஒழுங்கு அமைச்சர் ஜோன் அமரதுங்க கடந்த திங்களன்று அறிவித்திருந்த நிலையில் இதுவரை 10 பேர்ல் விண்ணப்பம் செய்துள்ளனர்.

www.immigration.gov.lk என்ற இணைய முகவரியில் இது பற்றிய விபரங்களை பெற்றுக்கொள்ளலாம்.