செய்திகள்

10 பொருட்களுக்கான இறக்குமதி கட்டுப்பாடுகள் இன்று முதல் அமலுக்கு வரும் வகையில் நீக்கம்

10 பொருட்களுக்கான இறக்குமதி கட்டுப்பாடுகள் இன்று செவ்வாய்க்கிழமை முதல் அமலுக்கு வரும் வகையில் நீக்கப்பட்டுள்ளது.இதன்படி சுற்றுலாத் துறைக்கான பானங்கள், MDF தளபாடங்கள், பாதுகாப்பு நோக்கங்களுக்காக CCTV மற்றும் விளையாட்டு அமைச்சகத்தால் அங்கீகரிக்கப்பட்ட பொருட்கள் என்பன இதில் அடங்குவதாக குறிப்பிடப்பட்டுள்ளது.

விசேட வர்த்தமானி அறிவித்தல் ஊடாக கட்டுப்பாடுகள் நீக்கப்பட்டுள்ளதாக நிதி இராஜாங்க அமைச்சர் ரஞ்சித் சியம்பலாபிட்டிய தெரிவித்துள்ளார்.(15)