செய்திகள்

100நாள் முடிந்துவிட்டது தேசிய நிறைவேற்று சபையை கலையுங்கள் : ஜே.வி.பி கோரிக்கை

தேசிய நிறைவேற்று சபையின் சகல பணிகளும் முடிவடைந்துவிட்டதாகவும் தொடர்ந்தும் அதனை நடத்தி செல்வது அர்த்தமற்றது எனவும் இதனால் உடனடியாக நிறைவேற்று சபையை கலைக்க வேண்டுமென ஜே.வி.பி தலைவர் அனுரகுமார திஸாநாயக்க தெரிவித்துள்ளார்.
100 நாள் முடிவடைந்துவிட்டது புதிய அரசியல் பயணத்துக்காக அணி திரளுவோம் எனும் தொனிப்பொருளில் கொழும்பில் மக்களை தெளிவுப்படுத்தும் வகையில் நேற்று துண்டுபிரசுரங்களை விநியோகித்து வைத்து ஊடகங்களுக்கு மத்தியில் உரையாற்றும் போதே அவர் இவ்வாறு தெரிவித்துள்ளார்.
புதிய ஆட்சியில் 100நாள் திட்டங்களை முன்வைத்து அதில் ஓர் அங்கமாக தேசிய நிறைவேற்று சபையும் அமைக்கப்பட்டது. அதற்கென சில முக்கிய கடமைகளும் ஒப்படைக்கப்பட்டிருந்தது. அந்த கடமைகளை சரிவர பூதத்தி செய்து முடிக்கப்பட்டுள்ளது. இந்நிலையில் 100 நாள் முடிவடைந்தும் அதனை தொடருவது அர்த்தமற்றது இதனால் உடனடியாக அந்த சபையை கலைக்க வேண்டும். என அவர் தெரிவித்துள்ளார்.
000