100ற்கும் மேற்பட்ட ஐ.ம.சு.கூ உறுப்பினர்கள் மஹிந்தவுடன் விசேட சந்திப்பு
முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ தலைமையில் ஐக்கிய மக்கள் சுதந்திரக் கூட்டமைப்பின் உறுப்பினர்களுக்கிடையே நேற்று இரவு விசேட சந்திப்பொன்று நடைபெற்றுள்ளது.
மேல் மாகாண முதலமைச்சர் பிரசன்ன ரணதுங்கவின் வீட்டில் நடைபெற்றுள்ள இந்த சந்திப்பில் கூட்டமைப்பின் பொதுச் செயலாளர் சுசில் பிரேம ஜயந்த கலந்துக்கொண்டுள்ளதுடன் 100ற்கும் மேற்பட்ட முன்னாள் எம்.பிகளும் கலந்துக்கொண்டுள்ளனர்.
இந்த சந்திப்பின் போது தேர்தல் நடவடிக்கைகள் தொடர்பாக கலந்துரையாடப்பட்டுள்ளதுடன் மஹிந்தவுக்கு வேட்பு மனு கொடுக்க இணங்கியமைக்காக ஜனாதிபதிக்கு நன்றி தெரிவிக்க வேண்டுமெனவும் தெரிவிக்கப்பட்டுள்ளதாக தெரிய வருகின்றது.
இதேவேளை தேர்தலில் ஒருவருக்கொருவர் விமர்சித்துக் கொண்டிருக்காது கட்சியின் வெற்றிக்காக சகலரும் இணைந்து செயற்பட வேண்டுமெனவும் 9ம் திகதி அனுராதபுரத்தில் நடைபெறவுள்ள கூட்டத்தில் மைத்திரியையும் மஹிந்தவையும் கலந்துக்கொள்ள செய்ய வேண்டுமெனவும் இங்கு யோசனைகள் முன்வைக்கப்பட்டுள்ளதுடன் எதிர்வரும் நாட்களில் அவர்கள் இருவரையும் சந்திக்க செய்யவும் யேசனைகள் முன்வைக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.




