செய்திகள்

100 கோடியை தாண்டிய ‘காஞ்சனா –2’

அண்மையில் வெளிவந்த ‘காஞ்சனா 2’ திரைப்படம் 100 கோடி ரூபாய்க்கு மேல் வசூலை அள்ளியுள்ளது என தெரிவிக்கப்படுகின்றது . காஞ்சனா படத்தின் முதல் பாகம் வெற்றி பெற்றதை தொடர்ந்து காஞ்சனா 2 படம் தயாரிக்கப்பட்டது. லாரன்ஸ்இ நித்யா மேனன்இ தாப்ஸிஇ கோவை சரளா உள்ளிட்டோர் நடிப்பில் வெளியான ‘காஞ்சனா 2’இ விமர்சகர்களிடமும்இ ரசிகர்களிடமும் ஏகோபித்த வரவேற்பைப் பெற்றது. காஞ்சனா 1 படத்தை விட காஞ்சனா 2 படம் மிகப் பெரும் வெற்றியைப் பெற்று வசூல் சாதனையை படைத்துள்ளது. தற்போது 50 நாட்களைக் கடந்து ஓடி வரும் இத்திரைப்படம்இ இன்னமும் தமிழ்நாட்டின் சில பகுதிகளில் அரங்கு நிறைந்த காட்சிகளாக ஓடிவருவது குறிப்பிடத்தக்கது.

தமிழ் சினிமாவில் இந்த வருடம் முதல் ப்ளாக்பஸ்டர் படமாக ‘காஞ்சனா 2′ உருவாகியுள்ளது என கூறப்படுகின்றது. டிக்கெட் விற்பனையில் மட்டும் இத்திரைப்படம் ரூ.108 கோடியை அள்ளியுள்ளது’ என்றார். ரூ.17 கோடி பட்ஜெட்டில் உருவானதாக கூறப்படும் ‘காஞ்சனா 2’இ சம்பந்தப்பட்ட அனைத்துத் தரப்பினருக்கும் லாபகரமான படமாக அமைந்துள்ளது.

இந்த வெற்றியினை தொடர்ந்து தற்போது ‘காஞ்சனா 3’-ஆம் பாகத்துக்கான கதை தயாராகி வருவதாக லாரன்ஸ் தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளதை தொடர்ந்து இது தொடர்பான எதிர்பார்ப்புக்கள் அதிகரித்துள்ளது .