செய்திகள்

100 நாட்கள் முடிந்துவிட்டன: ஆட்சியில் மாற்றத்தை கோரும் மஹிந்த

தற்போதைய ஆட்சி முறைமையில் மாற்றம்இடம்பெற வேண்டும் என  முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்‌ஷ தெரிவித்துள்ளார். புத்தல பகுதியில் நடைபெற்ற நிகழ்வொன்றில் கலந்துக்கொண்டு உரையாற்றுகையிலேயே அவர் இவ்வாறு தெரிவித்துள்ளார்.

100 நாள் முடிந்து விட்டது அவர்கள் கூறிய மாற்றம் இன்னும் ஏற்படவில்லை.  எவ்வாறாயினும் தற்போதைய ஆட்சி முறைமையில் மாற்றம் வேண்டும்.

தற்போது நான் நிகழ்வுகளில் கலந்துக்கொள்வது, விகாரைகளுக்கு செல்வது ஆகியன தொடர்பாக பலவாறு கதைக்கின்றார்கள். நான் எங்கு சென்றாலும் தவறாக பார்க்கின்றனர். நான் இவ்வாறு ஒவ்வொரு இடங்களுக்கும் செல்வது நான் இன்னும் உயிருடன் இருக்கின்றேன். உங்களின் அப்பச்சி இன்னும் இருக்கிறார் என்பதனை காட்டவே. என  அவர் தெரிவித்துள்ளார்.