செய்திகள்

100 நாள் திட்டத்துக்கு ஐநா ஒத்துழைப்பு வழங்கத் தயார்: பிரதமரிடம் உறுதியளித்தார் ஐநா பிரதிநிதி

6 நாள் விஜயத்தை மேற்கொண்டு இலங்கைக்கு வருகை தந்துள்ள ஐக்கிய நாடுகளின் பிரதி பொதுச் செயலாளர் அவுலியன் சூ இன்று பிரதமர் ரணில் விக்கிரமசிங்கவை சந்தித்துள்ளார்.

இந்த அரசாங்கத்தின் 100 நாள் வேலைத்திட்டத்திற்கு முன்னுரிமை கொடுக்கும் வகையில், ஐக்கிய நாடுகள் சபை முடியுமான அளவு ஒத்துழைப்பினை வழங்கும் என தெரிவித்துள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.

இலங்கையில் உள்ள ஐக்கிய நாடுகளின் பிரதிநிதிகளுக்கு வழங்கப்படும் ஒத்துழைப்புகள் தொடர்பில் பிரதமர் ரணில் விக்கிரமசிங்கவுடன் பிரதி பொது செயலாளர் கலந்துரையாடியுள்ளார்.