செய்திகள்

100 நாள் முடிந்து விட்டது பாராளுமன்றத்தை உடனடியாக கலையுங்கள் : தினேஷ் குணவர்தன

மக்களுக்க வழங்கிய வாக்குறுதியின்படி உடனடியாக பாராளுமன்றம் கலைக்கப்பட வேண்டுமென ஐக்கிய மக்கள் சுதந்திர கூட்டமைப்பு பாராளுமன்ற உறுப்பினர் தினேஷ் குணவர்தன தெரிவித்துள்ளார்.
100 நாள் முடிவடைந்துள்ள நிலையில் இனியும் பாராளுமன்றத்தில் பெரும்பான்மை பலம் இல்லாத பிரிவினர் ஆட்சியமைப்பதை ஏற்றுக்கொள்ள முடியாதெனவும் இதனால் பாராளுமன்றம் கலைய வேண்டுமெனவும் அவர் தெரிவித்துள்ளார். நேற்று பாராளுமன்ற கட்டிடத் தொகுதியில் நடைபெற்ற  செய்தியாளர் சந்திப்பின் போதே அவர் இதனை தெரிவித்துள்ளார்.
ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன தேர்தல் காலத்தில் முன்வைத்த 100 நாள் வேலைத்திட்டத்தின் காலம் முடிந்து விட்டது. இனியும் இந்த அரசாங்கத்தின் செயற்பாடுகளை பொறுத்துக் கொள்ள முடியாது. மக்களுக்கு வழங்கிய வாக்கறுதியின் பிரகாரம் உடனடியாக பாராளுமன்றத்தை கலைக்க ஜனாதிபதி நடவடிக்கையெடுக்க வேண்டும். என அவர் தெரிவித்துள்ளார்.