செய்திகள்

100 நாள் வேலைத்திட்டம் பூர்த்தியான பின்னரே பாராளுமன்றம் கலைக்கப்படும் என்கிறார் ராஜித சேனாரத்ன

20ஆவது அரசியலமைப்புத் திருத்தத்துடன் 100 நாள் வேலைத்திட்டத்தில் அறிவிக்கப்பட்ட தகவலறியும் உரிமைச் சட்டமூலம் உட்பட அனைத்துச் சட்ட மூலங்கள், திருத்தங்கள் ஆகியவற்றை நிறைவேற்றும் வரை பாராளுமன்றம் கலைக்கப்படமாட்டாது என அமைச்சரவைப் பேச்சாளரும் சுகாதார அமைச்சருமான டாக்டர் ராஜித சேனாரத்ன நேற்று வியாழக்கிழமை தெரிவித்தார்.

ஐக்கிய தேசியக் கட்சி தேர்தலுக்கு அவசரப்படுகின்றது. அதேபோன்று மகிந்த ராஜபக்ஷ, விமல் வீரவன்ச, உதய கம்மன்பில போன்றோரும் தேர்தலுக்கு அவசரப்படுகின்றனர். தோல்வி கண்டவர்கள் கூட விரைவில் தேர்தலை எதிர்பார்ப்பதாகவும் அவர் தெரிவித்தார். அமைச்சரவைத் தீர்மானங்களை அறிவிக்கும் வாராந்தச் செய்தியாளர் மாநாட்டின் போதே அவர் மேற்கண்டவாறு தெரிவித்தார்.