செய்திகள்

100 நாள் வேலைத் திட்டம் இன்றுடன் காலாவதியாகின்றது

புதிய ஆட்சியின் 100 வேலைத் திட்டத்திற்கான கால எல்லை  இன்றுடன் முடிவடைகின்றது.
ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன ஜனவரி 8ம் திகதி நடைபெற்ற ஜனாதிபதி தேரிதலில் மஹிந்தவுக்கு எதிரான பொது வேட்பாளராக போட்டியிட்ட போது தான் ஆட்சிக்கு வந்ததும் செய்வதாக கூறி நிறைவேற்று அதிகாரத்தை நீக்குதல் உள்ளிட்ட வேலைத்திட்டங்கள் பலவற்றை முன்வைத்து 100நாட்களையும் கால எல்லையாக தனது தேர்தல் விஞ்சாபனத்தில் குறிப்பிட்டிருந்தார்.
அதன்படி அந்த வேலைத்;திட்டத்தின் கால எல்லை இன்றுடன் முடிவடைகின்றது.
குறித்த வேலைத்திட்டத்தில் காணப்பட்டுள்ள விடயங்களில் சில விடயங்கள் மாத்திரமே 100 நாட்களில் செய்து முடிக்கப்பட்டுள்ள நிலையில் சில விடயங்கள் நிறைவேற்றப்படாமலும் மேலும் சில விடயங்கள் செயற்படுத்துவதற்கான வேலைத்திட்டங்கள் நடைபெற்றுககொண்டிருக்கும் நிலையிலும் காணப்படுகின்றது.
அந்த வகையில் நிறைவேற்று அதிகாரத்தை குறைப்பதற்கான வேலைத்திட்டம் தொடர்நதும் இடம்பெற்று வருவதுடன் தேர்தல் திருத்தத்திற்கான வேலைத்;திட்டம் ஆரம்பிக்கப்படும் நிலைமையில் இருக்கிறது.
எவ்வாறாயினும் புதிய ஆட்சியின் 100 நாள் வேலைத் திட்டத்தின் பிரகாரம் இன்றைய தினம் பாராளுமன்றம் கலைக்கப்பட வேண்டும். ஆனால் நிறைவேற்று அதிகாரத்தை குறைக்கும்; விடயம் இன்னும் நிறைவேற்றப்படாது இருப்பதனால் அதனை நிறைவேற்றிய பின்னர் எதிர்வரும் வாரங்களில் கலைக்கப்படலாம் என தெரிவிக்கப்படகின்றது.
இருப்பினும் இன்றைய தினம் இரவு ஜனாதிபதி இலத்திரனியல் ஊடகங்களினுடாக நாட்டு மக்களுக்கு மத்தியில் உரையாற்றவுள்ளதுடன் அதன் போது இந்த விடயம் தொடர்பான தீர்மானத்தை அறிவிப்பார் என எதிர்பார்க்கப்படுகின்றது.