செய்திகள்

100 நாள் வேலைத் திட்டம்: மக்களின் கருத்தை அறிய பிரதமர் திட்டம்

மைத்திரி அரசாங்கம் நடைமுறைப்படுத்தியுள்ள 100 நாள் வேலை திட்டத்தின் முன்னேற்றம் தொடர்பாக மக்களின் கருத்துக்களை அறிந்துகொள்வதற்கு பிரதமர் அலுவலகம் தீர்மானித்துள்ளது.

இதற்கமைய பொது மக்களின் கருத்துக்களை அறிந்துகொள்வதற்கான விசேட பொறிமுறையொன்று தயாரிக்கப்பட்டுள்ளதாக பிரதமர் அலுவலகம் விடுத்துள்ள ஊடக அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

மக்களின் பங்கேற்புடன் பயன்மிக்க, வினைத்திறன்மிக்க மற்றும் வெளிப்படைத்தன்மையுடன் கூடிய வகையில் 100 நாள் வேலை திட்டத்தினை ​வெற்றிபெறச் செய்வதே இதன் நோக்கம் என சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.

இந்த வேலைத் திட்டம் தொடர்பான பூரணமான விபரங்கள் தகவல்கள் மற்றும் அதன் தற்போதைய நிலைமை என்பவற்றை WWW. PMM. GOV.LK என்ற இணையத்தளத்தின் ஊடாக பெற்றுக்கொள்ள முடியும் என பிரதமர் அலுவலகம் தெரிவித்துள்ளது.

அரசாங்கத்தின் நூறு நாள் திட்டம் தொடர்பாக மக்களின் கருத்துக்கள், விமர்சனங்கள்,. பிரேரணைகள், குற்றச்சாட்டுகள் என்பவற்றை பணிப்பாளர் நாயகம், செயற்றிட்ட முகாமைத்துவம் மற்றும் கண்காணிப்புத் திணைக்களம், இலங்கை மத்திய வங்கிக் கட்டிடம், ஜனாதிபதி மாவத்தை, கொழும்பு- 01.  என்ற முகவரிக்கு அனுப்பிவைக்க முடியும் என அறிவிக்கப்பட்டுள்ளது.