செய்திகள்

100 மதுபான போத்தல்களை கொண்டு சென்ற இருவர் பொகவந்தலாவ பொலிஸாரால் கைது

பொகவந்தலாவ கொட்டியாகலை கிழ் பிரிவு தோட்டபகுதிக்கு விற்பனை செய்வதற்க்காக 100 மதுபான போத்தல்களை கொண்டு சென்ற இருவர் பொகவந்தலாவ பொலிஸாரால் கைது செய்யபட்டுள்ளதாக பொகவந்தலாவ பொலிஸார் தெரிவித்தனர்.

போயாதினத்தினை முன்னிட்டு 20.04.2016 அன்று இரவு விற்பனைக்காக கொண்டு சென்ற போது முச்சக்கரவண்டி சாரதியும் மதுபான போத்தல்களுக்கான உரிமையாளரும் இவ்வாறு கைது செய்யபட்டுள்ளதோடு முச்சக்கர வண்டி ஒன்றையும் பொகவந்தலாவ பொலிஸார் மடக்கி பிடித்துள்ளனர்.

பொகவந்தலாவ பொலிஸாரால் மேற்கொள்ளபட்ட விஷேட சுற்று வலைப்பின் போதே இவர்கள் கைது செய்யபட்டதாக பொலிஸாரின் ஆரம்பகட்ட விசாரனைகளில் தெரியவந்துள்ளது.

 சம்பவம் தொடர்பில் மேலதிக விசாரனைகளை பொகவந்தலாவ பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.

n10