செய்திகள்

1,000 சட்டவிரோத குடியேற்றவாசிகள் படகொன்றிலிருந்து மீட்பு!

லிபியாவிலிருந்து மத்திய தரைக்கடலினூடாக ஐரோப்பாவை நோக்கிப் பயணித்த படகொன்றிலிருந்து 200 சிறுவர்கள் உட்பட 1000 க்கு மேற்பட்ட சட்டவிரோதக் குடியேற்றவாசிகள் இத்தாலிய கடற்படைக் கப்பலொன்றால் மீட்கப்பட்டுள்ளனர்.

அவர்கள் இரு தளங்களைக் கொண்ட படகொன்றில் அசைய முடியாத வகையில் திணிக்கப்பட்டிருந்தனர்.
அந்தப் படகில் பயணித்தவர்கள் லிபியா மற்றும் எரித்திரியாவைச் சேர்ந்தவர்கள் என தெரிவிக்கப்படுகிறது.

அவர்கள் லிபிய கடற்கரையிலிருந்து சுமார் 30 மைல் தொலைவில் பயணித்த வேளையில் மீட்கப்பட்டுள்ளனர்.