செய்திகள்

1000 ரூபா கோரும் போராட்டம் தொடர்கிறது : கூட்டு ஒப்பந்தம் இன்று கைச்சாத்தாகுமா?

தோட்டத் தொழிலாளர்களின் சம்பள அதிகரிப்பு தொடர்பான கூட்டு ஒப்பந்தம் இன்று 14ஆம் திகதி கைச்சாத்தாகவுள்ளதாக தெரிவிக்கப்பட்ட போதும் அது இன்று சாத்தியப்படாது என தொழிற்சங்க தகவல்கள் தெரிவிக்கின்றன.
எவ்வாறாயினும் இன்றைய தினம் அது தொடர்பாக சம்பந்தப்பட்ட தொழிற்சங்கங்களுக்கும் மற்றும் தொழில் அமைச்சருக்குமிடையே விசேட கலந்துரையாடலொன்று நடத்தப்படவுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.ஆனாலும் கூட்டு ஒப்பந்தம் இன்று கைச்சாத்தாகும் சாத்தியப்பாடுகள் குறைவாகவே உள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
730 ரூபா சம்பள அதிகரிப்பை வழங்க தீர்மானிக்கப்பட்ட போதும் வேலை நாட்கள் மற்றும் ஒப்பந்த காலம் தொடர்பாக இன்னும் இறுதி தீர்மானம் மேற்கொள்ளப்படாதிருக்கும் நிலையிலேயே இன்று கைச்சாதாகும் சாத்தியங்கள் குறைந்துள்ளன.
எவ்வாறாயினும் 1000 ரூபா சம்பளம் கோரி தோட்டத் தொழிலாளர்கள் தொடர்ந்தும் போராடி வருகின்றனர். இந்த போராட்டத்தை மேலும் விரிவு படுத்தும் வகையில் தொழிற்சங்கங்களுக்கான சந்தா நிறுத்தப் போராட்டத்தை தொழிலாளர்கள் ஆரம்பித்துள்ளமையும் குறிப்பிடத்தக்கது. -(3)