104 செய்மதிகளை விண்ணில் ஏவி இந்தியா சாதனை படைத்தது
விண்வெளி துறையில் வரலாற்றில் நிலைத்து நிற்கும் சாதனை ஒன்றை இந்தியா முதல் முறையாக 104 செய்மதிகளை ஒரே முறையில் விண்ணில் ஏவியுள்ளது.
இதற்கு முன்னர் ரஷ்யாவே ஒரே முறையில் அதிகளவு செய்மதிகளை விண்ணிற்கு ஏவி சாதனை படைத்தது. இந்திய விண்வெளி ஆராய்ச்சி நிலையமான ஸ்ரோவினால் பிஎஸ்எல்வி சீ 37 ரக ஏவுகணையில் இச் செயற்கை கோல்கள் விண்ணில் ஏவப்பட்டு சாதனை படைக்கப்பட்டது.
7 நாடுகளை சேர்ந்த 104 செயற்கை கோல்கள் ஸ்ரீ ஹரிகோட்டா விண்வெளி ஆய்வு மையத்திலிருந்து இன்று காலை 9.28 மணிக்கு பிஎஸ்எல்வி ஏவுகணை மூலம் விண்ணில் செலுத்தப்பட்டது. இந்த செயற்கை கோல்கள் மூலம் சட்டவிரோத கடற்றொழில் கடற்கொள்ளைகள் ஆகியவற்றை அவதானிக்க முடியும். இதற்கு முன்னர் ரஷ்யா 33 செயற்கை கோல்களை விண்ணிற்க அனுப்பியதே பெரும் சாதனையாக கருதப்பட்டது.
இந்தியா இதற்கு முன்னர் 2016 ஆம் ஆண்டு ஒரே நேரத்தில் 20 செயற்கை கோல்களை விண்ணில் செலுத்தியமை குறிப்பிடத்தக்கது.




