செய்திகள்

11 வயது சிறுவன் பாலியல் துஸ்பிரயோகம்: இரு இளைஞர்கள் கைது

11 வயது சிறுவன் பாலியல் துஷ்பிரயோகத்திற்குட்படுத்தினார் என்ற சந்தேகத்தின் பேரில் இரண்டு இளைஞர்கள் கைதுசெய்யப்பட்டுள்ளதாக பொகவந்தலாவ பொலிஸார் தெரிவித்தனர்.

குறித்த சிறுவனின் பெற்றோர்களால் கொடுத்த முறைப்பாட்டினையடுத்து பொகவந்தலாவ பகுதியை சேர்ந்த 21, 24 வயது மதிக்கதக்க இரண்டு இளைஞர்களும் இவ்வாறு சந்தேகத்தின் பேரில் கைது செய்யப்பட்டுள்ளனர்.

இச்சம்பவம் 22.05.2015 அன்று மாலை இடம்பெற்றுள்ளது. குறித்த சிறுவன் பொகவந்தலாவ குயினா பகுதியை சேர்ந்தவர் என தெரியவந்துள்ளது.

சந்தேகத்தின் பேரில் கைது செய்த இளைஞர்களை அட்டன் நீதிமன்றத்தில் ஆஜர்ப்படுத்த நடவடிக்கைகள் எடுத்திருப்பதாக பொகவந்தலாவ பொலிஸார் தெரிவித்தனர்.

மேற்படி சிறுவனை மேலதிக பரிசோதனைக்காக நாவலப்பிட்டி வைத்தியசாலைக்கு கொண்டு செல்லப்பட்டுள்ளதாக தெரிவித்த பொலிஸார் இச்சம்பவம் தொடர்பான மேலதிக விசாரணைகளையும் மேற்கொண்டு வருகின்றனர்.