செய்திகள்

110 கிலோ ஹெரோயின் கடத்தலுடன் தொடர்புடைய முக்கிய சந்தேகநபர் கட்டுநாயக்கவில்லை கைது

தெற்கு கடற்பரப்பில் சில நாட்களுக்கு முன்னர் மீட்கப்பட்ட 110 கிலோ கிராம் ஹெரோயின் போதைப்பொருளுடன் தொடர்புடைய முக்கிய சூத்திரதாரி கட்டுநாயக்க விமான நிலையத்தில் வைத்து கைது செய்யப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

இலங்கையரான பிரதான சந்தேகநபர் இன்று அதிகாலை இந்தியாவிலிருந்து இலங்கைக்கு வந்த போது கட்டுநாயக்க விமானநிலையத்தில் வைத்து கைது செய்யப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

குறித்த போதைப்பொருளை இலங்கைக்கு கடத்தி வர இவரே உதவியவர் என தெரிவிக்கப்படுகின்றது.

N5