செய்திகள்

113 நாட்களின் பின்னர் பாடசாலை சென்ற மாணவர்கள் : படங்கள்

நாட்டில் நிலவிய கொரொனா வைரஸ் தொற்று நிலைமை காரணமாக மூடப்பட்டிருந்த பாடசாலைகள் 113 நாட்களின் பின்னர் இன்று திங்கட்கிழமை மாணவர்களின் கல்வி நடவடிக்கைகளுக்காக திறக்கப்பட்டன.
ஏற்கனவே கடந்த 29ஆம் திகதி முதல் பாடசாலைகள் திறக்கப்பட்ட போதும் அதிபர் , ஆசிரியர்கள் மற்றும் கல்விசாரா ஊழியர்கள் மாத்திரமே பாடசாலைகளுக்கு வரவழைக்கப்பட்டிருந்தனர். எவ்வாறாயினும் இன்று திங்கட்கிழமை முதலே மாணவர்கள் பாடசாலைகளுக்கு அழைக்கப்பட்டுள்ளதுடன் இன்று முதல் அவர்களுக்கான கற்பித்தல் நடவடிக்கைகளும் ஆரம்பிக்கப்பட்டன.
இன்று முதல் கட்டம் கட்டமாக மாணவர்கள் பாடசாலைகளுக்கு அழைக்கப்படவுள்ளனர். இதன்படி இன்றைய தினத்தில் 5 , 11 மற்றும் 13ஆம் தர மாணவர்கள் மாத்திரம் பாடசாலைகளுக்கு அழைக்கப்பட்டனர்.
மிகவும் ஆர்வத்துடன் மாணவர்கள் இன்றைய தினத்தில் பாடசாலைகளுக்கு வந்ததாக ஆசிரியர்கள் தெரிவிக்கின்றனர்.
அவர்களுக்கு தேவையான சுகாதார பாதுகாப்பு வசதிகள் பாடசாலைகளில் ஏற்படுத்தப்பட்டுள்ளன. -(3)