செய்திகள்

114 பாராளுமன்ற உறுப்பினர்கள் மஹிந்தவுக்கு ஆதரவாக கையொப்பம் !

முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவை லஞ்ச ஊழல் ஒழிப்பு ஆணைக்குழுவிற்கு அழைத்தமைக்கு எதிர்ப்பு தெரிவிக்கும் மனுவில் இதுவரை 114 பாராளுமன்ற உறுப்பினர்கள் கையொப்பம் இட்டுள்ளதாக பாராளுமன்ற உறுப்பினர் டலஸ் அழகப்பெரும தெரிவித்துள்ளார்.

மேலும் இந்த நடவடிக்கைக்கு எதிர்ப்பு தெரிவித்து நேற்று இரவு வரை பாராளுமன்றில் 40 வரையான பாராளுமன்ற உறுப்பினர்கள் சத்தியாக்கிரக போராட்டத்தில் ஈடுபட்டதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இதேவேளை, லஞ்ச ஊழல் ஒழிப்பு ஆணைக்குழு பணிப்பாளர் நாயகத்தை பாராளுமன்றுக்கு அழைத்த சபாநாயகர் அது தொடர்பான தகவல்களை இன்று அறிவிக்கவுள்ளார்.