செய்திகள்

12ஆம் திகதி நாட்டில் உள்ள மதுபான விற்பனை நிலையங்கள் மூடப்படும்

கண்டி அஸ்கிரிய மஹாநாயக்க தேரர் உடுகம ஸ்ரீ புத்தரக்கித்த தேரரது இறுதிக் கிரிகைகள் இடம்பெறும் தினமான எதிர்வரும் 12ஆம் திகதி நாட்டில் உள்ள மதுபான விற்பனை நிலையங்கள் மூடப்படவுள்ளது.

மதுவரித்திணைக்களம் இந்த அறிவித்தலை வெளியிட்டுள்ளது.

ஆம் திகதி துக்க தினம் அனுட்டிக்கப்படவுள்ள அதேவேளை அரைக்கம்பத்தில் இலங்கைக் கொடியை பறக்கவிடவும் அரசாங்கம் அறிவித்துள்ளது.