செய்திகள்

12ம் திகதி தேசிய துக்க தினமாக பிரகடனப்படுத்தப்பட்டுள்ளது

அஸ்கிரிய பீடத்தின் பீடாதிபதி உடுகம ஸ்ரீ புத்தரக்கித்த தேரரின் இறுதிக்கிரியை நடைபெறும் எதிர்வரும் 12ம் திகதியை தேசிய துக்க தினமாக அரசாங்கம் பிரகடனப்படுத்தியுள்ளது.

சிங்கப்பூரில் வைத்தியசாலையொன்றில் காலமான உடுகம ஸ்ரீ புத்தரக்கித்த தேரரின் பூதவுடல் இன்று இரவு கொழும்புக்கு கொண்டு வரப்பட்டு நாளை காலை கண்டிக்கு வாகன பேரணியாக கொண்டு செல்லப்படவுள்ளது. அத்துடன் எதிர்வரும் 12ம் திகதி மாலை அஸ்கிரிய மைதானத்தில் இறுதிக் கிரியைகள் நடத்தப்படவுள்ளது.

இலங்கையில் புத்த சாசனத்தின் பாதுகாப்புக்கும் வளர்ச்சிக்கும் அளப்பறிய சேவையாற்றியுள்ள இவர் இந்நாட்டில் மத நல்லிணக்கத்துக்காகவும் அர்ப்பணிப்புடன் செயலாற்றியுள்ளார். என்பது குறிப்பித்தக்கது.