செய்திகள்

12 வீடுகள் கட்டி தருவதாக கூறி 10 வீடுகள் மாத்திரம் கட்டப்படுகின்றன: மக்கள் விசனம் (ஆதாரங்கள், படங்கள்)

நுவரெலியா மாவட்டத்தில் கந்தப்பளை கொங்கோடியா மேற்பிரிவு தோட்டத்தில் மண்சரிவு அபாயத்தால் 12 வீடுகளை கொண்ட மக்களை பாதுகாப்பான இடத்திற்கு செல்லுமாறு தேசிய கட்டிட ஆராய்ச்சி நிலைய அதிகாரிகளால் 18.03.2015 அன்று தோட்ட நிர்வாகத்துக்கு அறிவிக்கப்பட்டது.

அதனை தொடர்ந்து தோட்ட நிர்வாகமும் பீ.எச்.டி.டிநிறுவனமும் இணைந்து தோட்ட உட்கட்டமைப்பு அமைச்சுடன் கலந்துரையாடி பாதிக்கப்பட்ட குடும்பங்களுக்கு வீடு கட்டி தருவதாக கூறப்பட்டது.

இதன் அடிப்படையில் 12 வீடுகள் கட்டுவதற்கான இடத்தினை தோட்ட நிர்வாகம் ஒதுக்கியது. வீடுகள் கட்டுவதற்காக அடிக்கல் 02.05.2015 அன்று நாட்டப்பட்டது. இதன் போது அரசியல் வாதிகள் கலந்துக்கொண்டனர்.

08.05.2015 அன்று 12 வீடுகளும் கட்டுவதாக கூறி நிலத்தை அளவெடுத்த பின் 19.05.2015 அன்று 10 குடும்ப அங்கத்தவர்களை மாத்திரம் அழைத்து வீட்டு இலக்கங்களைகுழுக்கள் முறையில் வழங்கி 20.05.2015 அன்று மீண்டும் நிலத்தினை 10 குடும்ப அங்கத்தவர்களுக்கு மாத்திரம் வழங்கியுள்ளார்கள். தற்போது இரண்டு குடும்பங்களை சேர்ந்தவர்களுக்கு வீடுகட்டுவதற்கான இடமும் அதற்கான நடவடிக்கைகளும் எடுப்பதுக்கு மறுப்பு தெரிவித்துள்ளனர்.12 வீடுகள் கட்டுவதற்கு அடிக்கல் நாட்டியதோடு அதற்கான ஆவனங்களும் வழங்கப்பட்டுள்ளமை குறிப்பிடதக்கது.

வீடுகள் கட்டுவதற்கான ஆரம்ப வேளைகள் முன்னெடுக்கப்படுகின்றது. பாதிக்கப்பட்ட இரண்டு குடும்பங்கள் தங்களுக்கும் வீடுகள் கட்டி தருமாறு இவர்கள் சம்பந்தப்பட்ட அதிகாரிகளிடம் கோரிக்கைவிடுக்கின்றனர்.

இது தொடர்பில் பொதுமக்கள் தெரிவித்த கருத்துக்களை கேட்க கீழே உள்ள இணைப்புக்களை அழுத்தவும்.

MOV020 MOV022 MOV026 MOV028

IMG_0004 IMG_0006 IMG_0007 IMG_0008 IMG_0009 IMG_0010 IMG_0011 IMG_0012 IMG_0013 Kongodiya (2) Kongodiya (3) Kongodiya (4) Kongodiya (5)