12 வயது தற்கொலை குண்டுதாரி குண்டை வெடிக்கவைக்க சில செக்கன்கள் முன்னர் அவனை பிடித்து குண்டுப்பட்டியை கழற்றிய ஈராக்கிய பொலிஸார் (வீடியோ)
ஐ. எஸ் ஐ.எஸ் பயங்கரவாத அமைப்பை சேர்ந்த 12 வயது சிறுவன் ஒருவன் தனது இடுப்பில் கட்டி இருந்த தற்கொலை குண்டை வெடிக்க வைப்பதற்கு முன்னர் அவனை ஒருவாறு பிடித்தது அந்த குண்டை ஈராக்கிய பொலிஸார் கழற்றி எடுக்கும் வீடியோ மற்றும் புகைப்படங்கள் வெளியாகி இருக்கின்றன.
இந்த சம்பவம் ஈராக்கின் கிர்குக் என்ற இடத்தில ஞாயிறு இரவு இடம்பெற்றுள்ளது.
மற்றொரு தற்கொலை குண்டுதாரி அதே நகரத்தின் சியா முஸ்லிம்களின் பள்ளிவாசல் ஒன்றில் தாக்குதல் நடத்தி ஒரு மணி நேரத்தின் பின்னர் இந்த சிறுவனின் இடுப்பில் இருந்த தற்கொலை அங்கி கழற்றப்பட்டு பின்னல் தனியாக வெடிக்கவைக்கப்பட்டது.
இந்த சம்பவத்தின்போது இந்த சிறுவன் மிகவும் பதற்றமாக காணப்பட்டான். தன்னை முக மூடி அணிந்த சிலர் கடத்திச்சென்று தனது உடலில் குண்டு பாட்டியை கட்டி இந்த இடத்துக்கு அனுப்பிவைத்ததாக இந்த சிறுவன் விசாரணைகளில் தெரிவித்துள்ளான்.
https://www.youtube.com/watch?v=R47z91UAtQM





