செய்திகள்

”13க்கு உட்பட்டதாக அதிகார பகிர்வுக்கு இணங்குகிறோம்”

13 ஆவது அரசியலமைப்பு திருத்தத்தின் ஊடாக அதிகார பகிர்வை மேற்கொள்ளும் நடவடிக்கைகளுக்கு தாம் பூரண ஆதரவை வழங்குவோம் என்று எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாச தெரிவித்துள்ளார்.

அதிகார பகிர்வுக்கு இணக்கமா என்று ஜனாதிபதி நேற்றைய தினம் பாராளுமன்றத்தில் எதிர்க்கட்சியிடம் எழுப்பியிருந்த கேள்விக்கு இன்று சபையில் பதிலளிக்கும் போதே சஜித் பிரேமதாச இவ்வாறு கூறியுள்ளார்.

பிளவுப்படாத நாட்டில் ஒருமைப்பாட்டை பாதுகாத்து 13 ஆவது திருத்தத்தில் உள்ளவாறு அதிகார பகிர்வை மேற்கொள்ளும் நடவடிக்கைகளுக்கு பூரண ஒத்துழைப்பை வழங்குவோம் என்பதுடன், அது தொடர்பான நடவடிக்கைகளுக்கு தலைமைத்துவம் வழங்கவும் தயாராக இருக்கின்றோம் என்று எதிர்க்கட்சித் தலைவர் தெரிவித்துள்ளார்.

-(3)