13வது திருத்தத்தை அடிப்படையாக கொண்டே தீர்வு : அரசாங்கம் அறிவிப்பு
13ஆவது அரசியலமைப்பு திருத்திற்கு உட்பட்டதாகவே தேசிய பிரச்சினைக்கான தீர்வுகள் இருக்குமென அரசாங்கம் இன்று பாராளுமன்றத்தில் அறிவித்துள்ளது.
இன்று பாராளுமன்றத்தில் புதிய அரசியலமைப்பு தொடர்பாக விமல் வீரவன்சவினால் எழுப்பப்பட்ட கேள்விகளுக்கு பதிலளித்த சபை முதல்வர் லக்ஷ்மன் கிரியெல்லவே இவ்வாறு தெரிவித்துள்ளார்.
புதிய அரசியலமைப்பு 13ஆவது அரசியலமைப்பு திருத்தத்தை அடிப்படையாக கொண்டதாகவே இருக்குமெனவும் அதற்கு அப்பால் இருக்காது எனவும் தெரிவித்துள்ள கிரியெல்ல சகல கட்சிகளின் ஆதரவுடன் சர்வஜன வாக்கெடுப்புடன் அரசியலமைப்பை நிறைவேற்றுவோம். என அவர் தெரிவித்துள்ளார். -(3)




