செய்திகள்

13 வது திருத்தத்திற்கும் அப்பால் செல்ல வேண்டும்: மோடி வலியுறுத்தல்

இந்திய பிரதமர் நரேந்திர மோடி இலங்கை தமிழர் விவகாரத்திற்கு தீர்வு காண்பதற்காக அரசமைப்பின் 13 திருத்தத்திற்கு அப்பாலும் செல்லவேண்டியதன் அவசியத்தை வலியுறுத்தியுள்ளார்.

இலங்கை ஜனாதிபதியுடனான சந்திப்பின் பின்னர் இருவரும் இணைந்து நடத்திய ஊடகவியலாளர் மாநாட்டிலேயே இவர் இதனை தெரிவித்துள்ளார்.

அவர் மேலும் குறிப்பிட்டுள்ளதாவது.

நான் இலங்கையில், இந்த அழகான கொழும்பு நகரத்தில் இருப்பது குறித்து மகிழ்ச்சியடைகிறேன்,
நான் இந்தியாவின் அயல்நாடாக விளங்குpன்ற தேசத்திற்கு விஜயம் செய்வது குறித்து ஆவலுடன் காத்திருந்தேன்.

இந்த விஜயத்தின் முக்கியத்துவத்தையும் நான் உணர்ந்துள்ளேன்,1987 ற்கு பின்னர் இந்திய பிரதமர் ஓருவர் இலங்கைக்கு மேற்கொள்கின்ற முதலாவது விஜயமிது.

B_9NXBkUQAEIw0iபொருளாதர உறவுகளே மிகவும் முக்கியமானவை

கடந்தமாதம், இலங்கை ஜனாதிபதியானதும் தனது முமுதலாவதுளிநாட்டுப்பயணத்தை இந்தியாவிற்கு மேற்கொண்டதன் மூலம் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன எங்களை கௌரவப்படுத்தினார். நான் இங்கு விரைவில் விஜயம் மேற்கொள்ள முடிந்தமை குறித்து மகிழ்ச்சியடைகின்றேன்.

அயல்நாடுகள் மத்தியிலான உறவு இப்படித்தானிருக்கவேண்டும்.நாங்கள் அடிக்கடி சந்தித்துக் கொள்ளவேண்டும்.

இது ஓருவரைஓருவர் புரிந்துகொள்ளவும், பரஸ்பர கரிசனைக்குரிய விடயங்களுக்கு தீர்வை காணவும்,எங்களது நட்புறவை முன்னோக்கி நகர்த்தவும் உதவும்.ஜனாதிபதி சிறிசேவுடனான இன்றை சந்திப்பின் மூலம் நான் சாதித்தது இதுதான்.

பொருளாதார உறவுகளே எங்களது உறவின் முக்கிய தூண்கள்.இந்த விடயத்தில் நாங்கள் அடைந்துள்ள முன்னேற்றம்,வலுவான பொருளாதார ஓத்துழைப்பு குறித்து எங்கள் மத்தியில் காணப்படும் அர்ப்பணிப்பை வெளிப்படுத்துகின்றது.

ஓரு தசாப்த காலமாக எங்களது வர்த்தகம் சிறந்த வளர்ச்சியை கண்டுள்ளது.இந்தியாவுடனான வர்த்தகம் பற்றிய உங்களது கரிசனைகள் குறித்து நான் அறிந்துள்ளேன்.புதுடில்லியில் நான் தெரிவித்தது போன்று அதற்கு தீர்வை காணமுயல்வோம்.

எங்கள் சுங்க திணைக்கள அதிகாரிகள் மத்தியில் இன்று கைச்சாத்தான உடன்படிக்கை அதனை நோக்கிய ஒரு செயற்பாடே.இது வர்த்தகத்தை இலகுவாக்கும்,இருதரப்பிலும் உள்ள தடைகளை குறைக்கும்.

நாங்கள் இந்த பிரச்சினைக்கு தீர்வை காண்பதற்கு மாத்திரம் முயலவில்லை. புதிய வாய்ப்புகள் குறித்தும் கவனம் செலுத்துகின்றோம்.

இன்று சீனன்குடாவில் லங்கா ஐஓஐசியும்,இலங்கை பெட்ரோலிய கூட்டுத்தபானமும் நடவடிக்கைகளை இணைந்து முன்னெடுப்பதற்கு இணங்கியுள்ளன. அதுதொடர்பான நடவடிக்கைகளை முன்னெடுப்பதற்கு விரைவில் கூட்டுச்செயலணியொன்று அமைக்கப்படும்.திருகோணமலை பிராந்திய எண்ணெய் தளமாக மாறுவதில் உதவுவதற்கு இந்தியா தயாராகவுள்ளது.

சம்பூர் மின்நிலையப்பணிகள் விரைவில் ஆரம்பிக்கப்படுவது குறித்துநான் ஆர்வம் கொண்டுள்ளேன்.  சமுத்திர பொருளாதாரம் என்பது எங்கள் இருநாடுகளுக்கும் பாரிய சாத்தியப்பாடுகளை அளிக்க கூடிய புதிய வாய்ப்பாகும்.இது இரு நாடுகளினதும் முன்னுரிமைக்குரிய விடயம்.இது தொடர்பான கூட்டு செயலணியொன்றை உருவாக்கும் நடவடிக்கை மிகவும் முக்கியத்துவம் வாய்ந்த ஓன்று.

மக்களே எங்களது உறவின் இருதயமாகவுள்ளனர்.மக்கள் மத்தியில் தொடர்பாடல்களை அதிகரிக்கவும், தொடர்புகள் மற்றும் உல்லசா பயணத்துறையை விஸ்தரிக்கவும் நாங்கள் பல நடவடிக்கைகளை எடுத்துள்ளோம்.புத்தாண்டு முதல் இலங்கை பிரஜைகளுக்கு இந்தியாவிற்கு வந்தவுடன் விசா வழங்கும் நடைமுறை அறிமுகப்படுத்தப்படும்.விரைவில் கொழும்பிற்கும் புதுடில்லிக்கும் இடையில் நேரடி விமானசேவை ஆரம்பமாகும்.

article-doc-131ao-6WziKijkZHSK2-745_634x438

மீனவர் விவகாரத்தை மனிதாபிமான ரீதியில் அணுகவேண்டும். 

நாங்கள் மீனவர்கள் விவகாரம் குறித்து ஆராய்ந்தோம்,மீனவர்கள் விவகாரத்தில் வாழ்வாதர மற்றும் மனிதாபிமான ரீதியிலான விடயங்கள் தொடர்புட்டுள்ளதால் அவற்றின் அடிப்படையிலேயே இவற்றிற்கு தீர்வை காணமுயலவேண்டும். அதேவேளை இந்த விவகாரத்திற்கு நீண்ட கால தீர்வை காண்பது அவசியம்.

இரு நாட்டு மீனவர் அமைப்புகளும் இருதரப்பும் ஏற்றுக்கொள்ள கூடிய பரஸ்பர தீர்வை காண்பதற்காக கூடிய விரைவில் சந்தித்து பேச்சுவார்த்தைகளை மேற்கொள்வது அவசியம்.இரு நாட்டு அரசாங்கங்களும் இதனை முன்னெடுக்கவேண்டும்.

இலங்கை தமிழர்கள் உட்பட அனைவரினதும் அபிலாஷைகளை உள்ளடக்கும் எதிர்காலத்தை உருவாக்கும் உங்களது முயற்சிகளிற்கும்,சமத்துவம், நீதி சமாதானம் ஆகியவை ஐக்கிய இலங்கைகுள் நிலவுவதற்கும் இந்தியா உங்களோடு உறுதுணையாகவுள்ளது.அரசமைப்பின் 13 வது திருத்த்தை கூடிய விரைவில் நடைமுறைப்படுத்துவதும், அதற்கு அப்பாலும் செல்வதும் இந்த செயற்பாடுகளுக்கு பங்களிப்பை வழங்கும். என அவர் குறிப்பிட்டுள்ளார்.