செய்திகள்

13 வயது மாணவியைத் துஷ்பிரயோகத்திற்குட்படுத்திய இளைஞனுக்கு விளக்கமறியல்

பாடசாலை செல்லும் பதின்மூன்று வயது மாணவியைத் தொடர்ச்சியாக நான்குநாட்கள் பாலியல் துஷ்பிரயோகத்திற்கு உள்ளாக்கிய இளைஞனை எதிர்வரும் 27 ஆம் திகதி வரை விளக்கமறியலில் வைக்குமாறு யாழ்.சிறுவர் நீதிமன்ற நீதவான் ஜெ.கஜநிதிபாலன் உத்தரவிட்டுள்ளார்.

அச்செழு பகுதியினைச் சேர்ந்த குறித்த சிறுமி அங்குள்ள ஆலயமொன்றின் திருவிழாவுக்குச் சென்ற போது அங்கு குளிர்பான நிலையத்தில் பணியாற்றிய இளைஞன் இனிப்பு வகைகளைக் கொடுத்துச் சிறுமியை ஏமாற்றிப் பாலியல் துஷ்பிரயோகத்திற்கு உட்படுத்தியுள்ளான்.

இது தொடர்பில் சிறுவர் நன்னடத்தை அதிகாரிக்குத் தெரியவந்ததை அடுத்து அவர் குறித்த சிறுமியிடம் விசாரணை மேற்கொண்டதுடன் குறித்த அதிகாரியின் உதவியுடன் சம்பவம் தொடர்பில் சிறுமியின் பெற்றோர் அச்சுவேலிப் பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடு செய்தனர்.

பொலிஸார் சிறுமியை யாழ்.போதனா வைத்தியசாலையில் மருத்துவ பரிசோதனைக்குட்படுத்தினர்.தொடர்ந்து சிறுமியின் வாக்குமூலத்தின் அடிப்படையில் விசாரணைகளை மேற்கொண்ட பொலிஸார் அதே பகுதியினைச் சேர்ந்த 27 வயதுடைய இளைஞனரொருவரைக் கடந்த 5 ஆம் திகதி கைது செய்து விசாரணைக்குட்படுத்தினர்.பின்னர் நீதிமன்ற அனுமதியுடன் மருத்துவ பரிசோதனையின் பின் குறித்த இளைஞனைக் கடந்த சனிக்கிழமை யாழ்.சிறுவர் நீதிமன்ற நீதவான் வாசஸ்தலத்தில் ஆஜர்படுத்தினர்.இதன் Nடீபாதே நீதவானால் மேற்படி விளக்கமறியல் உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.
யாழ்.நகர் நிருபர்-