செய்திகள்

15ஆம் திகதி தனியார் துறையினருக்கு விடுமுறை வழங்குங்கள் : தொழில் அமைச்சர் வேண்டுகோள்

எதிர்வரும் 15ஆம் திகதி தனியார் துறை ஊழியர்களுக்கும்  விடுமுறை வழங்குமாறு சகல தனியார் துறை தொழில் தருனர்களையும் தொழில் மற்றும் தொழிற்சங்க உறவுகள் அமைச்சர் டபிள்யூ.டி.ஜே.செனவிரட்ன கேட்டுக்கொண்டுள்ளார்.
ஏப்ரல் 15ஆம் திகதி பொது மற்றும் விசேட வங்கி விடுமுறை தினமாக அரசாங்கத்தினால் பிரகடனப்படுத்தப்பட்டுள்ளது.  எனவே அரச கூட்டுத்தாபனங்கள் , நியதி சபைகள் மற்றும் தனியார் துறையின் தொழில் தருனர்கள் அனைவரையும் தங்களின் அனைத்து ஊழியர்களுக்கும் ஏப்ரல் 15ஆம் திகதி விடுமுறை வழங்குமாறு தயவுடன் கேட்டுக்கொள்கின்றேன். என தெரிவித்துள்ளார்.
n10