செய்திகள்
15 ஆம் திகதி ஜனாதிபதி யாழ்ப்பாணம் விஜயம்: தீர்வுகள் குறித்து பேசுவார்!
ஜனவரி 15 ஆம் திகதி தான் யாழ்ப்பாணம் வரவுள்ளதாக தமிழ்க் கட்சிகளிடம் ஜனாதிபதி கூறியுள்ளார்.
நேற்று தமிழ்க் கட்சிகளின் பிரதிநிதிகள் ஜனாதிபதியை சந்தித்த போதே இதனை தெரிவித்துள்ளார்.
தான் 15 ஆம் திகதி யாழ்ப்பாணம் வரும் போது இனப்பிரச்சினைக்கு தீர்வுகள் தொடர்பில் கூறவுள்ளதாக அதன்போது ஜனாதிபதி கூறியுள்ளார்.
மேலும் வடக்கு, கிழக்கில் காணி சுவீகரிப்பை உடனடியாக நிறுத்துமாறு உரிய தரப்பினருக்கு உத்தரவிடுமாறு ஜனாதிபதி தனது செயலாளருக்கு அறிவித்துள்ளார்.
-(3)




