15 கோடி ரூபா திவிநெகும நிதியில் பறந்த பஸில் : ஜனாதிபதி ஆணைக்குழு விசாரணை
உள்ளக விமான பயணங்களுக்காக திவிநெகும நிதியை பயன்படுத்தியதாக தெரிவிக்கப்படும் குற்றச்சாட்டு தொடர்பாக முன்னாள் பொருளதார அபிவிருத்தி அமைச்சர் பஸில் ராஜபக்ஷவிடம் பாரியளவிலான நிதி மோசடிகள் தொடர்பான ஜனாதிபதி ஆணைக்குழு இன்று விசாரணை நடத்தியுள்ளது.
இவர் திவிநெகும திணைக்களத்திற்கு சொந்தமான நிதியிலிருந்து 15 கோடி ரூபாவை தனது விமான பயணத்திற்காக செலவழித்துள்ளதாக குற்றச்சாட்டுகள் முன்வைக்கப்பட்டுள்ளது.
இதேவேளை இது தொடர்பாக முன்னாள் நிதி அமைச்சின் செயலாளர் பீ.பீ.ஜயசுந்தரவிடமும் விசாரணை நடத்தபட்டுள்ளது. -(3)




