செய்திகள்

15 மணித்தியால தாமதம் : மன்னிப்பு கோரிய ஶ்ரீ லங்கன்

ஜேர்மன் பிரேன்க்பார்க் விமான நிலையத்திலிருந்து இலங்கை நோக்கி புறப்படவிருந்த ஶ்ரீ லங்கன் விமான சேவை நிறுவனத்திற்கு விமானத்தின் தாமதத்திறகு அந்த நிறுவனம் பயணிகளிடம் மன்னிப்பு கோரியுள்ளது.
குறித்த விமானத்தின் பணியாளர் ஒருவர் சுகயீனமடைந்த நிலையில் விமானம் அங்கிருந்து புறப்பட 15 மணித்தியாலங்கள் தாமதமாகியுள்ளன.
இதனால் பயணிகள் அசெளகரியங்களுக்கு உள்ளாகியுள்ள நிலையில் அதற்கு விமனச்சேவை நிறுவனம் பயணிகளிடம் மன்னிப்பு கோரியுள்ளது. இன்று காலை 4.30 மணிக்கு கட்டுநாயக்கவை வந்தடைய திட்டமிடப்பட்டிருந்த குறித்த விமானம் இன்று இரவு 7.15 மணியளவிலேயே கட்டுநாயக்கவை வந்தடையவுள்ளது. -(3)