செய்திகள்

15 வருடத்துக்கு பிறகு கமல் படத்துக்கு கிடைத்த கெளரவம்

இந்திய சினிமாவே வியந்து பார்க்கும் ஒரு நடிகர் என்றால் அது நம் கமல்ஹாசனாக தான் இருக்க முடியும். இவரின் பல படங்கள் தற்போது வரும் சினிமா நடிகர்களுக்கு ஒரு இன்ஸ்பிரஷனாகவே உள்ளது.

இந்நிலையில் கடந்த 2001-ஆம் ஆண்டு தமிழ்நாட்டில் வெளிவந்த ‘ஆளவந்தான்’ திரைப்படம் கலவையான விமர்சனங்களை சந்தித்து தோல்வி அடைந்தது. ஆனால் கமல் என்ற நடிகர் மட்டும் அந்த படத்தின் மூலம் மேலும் மேலும் மெருக தான் செய்தார்.

இந்நிலையில் அமெரிக்காவின் டெக்சாஸ் மாகாணத்தில் ஆண்டுதோறும் ‘Fantastic Fest’ என்ற பெயரில் திரைப்பட விழா நடைபெற்று வருகிறது. இந்த வருடம் செப்டம்பர் 22-ந் தேதி தொடங்கப்பட்ட இந்த விழாவில் ‘ஆளவந்தான்’ திரைப்படத்தை திரையிட்டது. இப்படத்தை இந்த விழாவில் பார்த்த பலரும் ‘ஆளவந்தான்’ படத்தை பற்றி பெரிதும் வியந்து போயுள்ளனர். சமூக வலைத்தளங்களில் ‘ஆளவந்தான்’ படத்தை பற்றி புகழ்ந்து பேசியுள்ளனர்.

‘ஆளவந்தான்’ படம் மிகவும் பிரம்மாண்டமாக இருந்ததாகவும், இந்த படத்தை பார்த்து இந்தியா படங்களை பார்க்க பலருக்கும் ஆர்வம் ஏற்பட்டுள்ளதாகவும் குறிப்பிட்டுள்ளனர்.

N5