செய்திகள்

150 வயதான ஆமை மரணம்

கலிஃபோர்னியாவின் சான் டியாகோ மிருகக்காட்சிசாலையில் உள்ள 150 வயதைத் தாண்டிய ராட்சத கலபாகோ ஆமை உயிரிழந்துள்ளது.

ஸ்பீட் என அழைக்கப்படும் இந்த ஆமை, எலும்பு தேய்மான பிரச்சினை உள்ளிட்ட பல உடல் நலக் கோளாறுகளால் பல ஆண்டுகளாக அவதிப்பட்டு வந்தது.

இந்த ஆமை ஈக்குவெடாருக்கு அருகில் உள்ள வோல்கன் செர்ரோ அஸுல் என்ற தீவிலிருந்து 1933ஆம் ஆண்டில் கலிஃபோர்னியாவுக்குக் கொண்டுவரப்பட்டது என்பது குறிப்பிடத்தக்கது.