செய்திகள்

150 வருடங்கள் பழமை வாய்ந்த ஆலமரம் வீழ்ந்ததில், ஒரு வீடு முற்றாக சேதம், பலர் காயம் (படங்கள் )

நுவரெலியா மாவட்டத்தில் கொட்டகலை, பெரிய மண்வெட்டி தோட்டத்துக்கு அண்மையில் 150 வருடங்கள் பழமை வாய்ந்த ஆலமரம் வீழ்ந்ததில், ஒரு வீடு முற்றா சேதமடைந்துள்ளதுடன் அந்த வீட்டிலிருந்த 8 பேர் காயமடைந்ந நிலையில் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.

இந்த சம்பவம் நேற்று சனிக்கிழமை அதிகாலை இடம்பெற்றுள்ளது.

இதில் 7 பேர் கொட்டகலை வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ள நிலையில் ஒருவர் மேலதிக சிகிச்சைகளுக்காக நாவலபிட்டி வைத்தியசாலைக்கு மாற்றப்பட்டுள்ளார்.

மேற்படி மரம் சரிந்து வீழ்ந்ததில் வீடு முற்றாக சேதமடைந்துள்ளததுடன் வீட்டுக்குள் இருந்த 8 பேரும் காயமடைந்துள்ளனர்.

இதேவேளை, பாதிக்கப்பட்டவர்களின் கூக்குரல் சத்தம் தோட்ட மக்களுக்கு கேட்டதையடுத்து சம்பவ இடத்துக்கு வந்த தோட்ட மக்கள் பாதிக்கப்பட்டவர்களை மீட்டுள்ளனர்.

இது தொடர்புடைய மேலதிக விசாரணைகளை திம்புள்ள பத்தனை பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.

DSC08580 DSC08582 DSC08591 DSC09966 DSC09967 DSC09975