செய்திகள்

கூட்டமைப்பின் தலைமையைப் பொறுப்பேற்றுக்கொள்ளுங்கள்: ‘விக்கி’க்கு ‘கஜன்’ அழைப்பு

தமிழ்த் தேசியக் கூட்ட­மைப்பின் கட்சித் தலை­மையை முத­ல­மைச்சர் விக்கி­னேஸ்­வரன் பொறுப்­பேற்­க­வேண்டும் அல்­லது கட்­சியை விட்டு விலகி எம்­முடன் இணைந்து செயற்­பட வேண்டும் என தமிழ்­தே­சிய மக்கள் முன்­னணி அழைப்பு விடுத்­துள்­ளது.

தமிழ் தேசிய மக்கள் முன்­ன­ணியின் ஊட­க­வி­ய­லாளர் சந்­திப்பு நேற்று யாழ்.ஊடக அமை­யத்தில் நடை­பெற்­ற­போது அக்­கட்­சியின் தலைவர் கஜேந்­தி­ர­குமார் பொன்­னம்­பலம் இதனைத் தெரி­வித்தார் அவர் அங்கு மேலும் தெரி­விக்­கையில்,

வட­மா­காண முத­ல­மைச்சர் ஆரம்­பத்தில் அர­சி­ய­லுக்கு வந்­த­போது ஒரு கருத்­தையும் தற்­போது வேறு ஒரு கருத்­தையும் கூறி வரு­கிறார். குறிப்­பாக வட­மா­காண சபையில் இன அழிப்பு பிரே­ர­ணையும் மற்­று­மொரு இடத்தில் இரு தேசம் ஒரு நாடு என்ற எமது நிலைப்­பாட்டில் தற்­போ­தைய கருத்தும் உள்­ளது.

தமிழ்­தே­சிய மக்கள் முன்­னணி கடந்த 5 வரு­டங்­க­ளாக பொறுப்­புக்­கூறல் மற்றும் இன­அ­ழிப்­புக்கு உரிய விசா­ரணை யுத்த காலத்தில் மட்­டு­மன்றி 1948 ஆம் ஆண்டில் இருந்து இன்­று­வ­ரைக்கும் நடந்து கொண்­டி­ருக்கும் விட­யங்கள் விசா­ர­ணைக்­குட்­ப­டுத்த வேண்டும் என்று கோரிவருகின்றது. இனப்­பி­ரச்­சினை தீர்வு விட­யத்தில் இரு தேசம் ஒரு­நாடு என்ற கோட்­பாட்டில் தமிழ்­தே­சிய மக்கள் முன்­னணி செயல்­பட்­டு­வந்­தது. இதே கருத்தை முத­ல­மைச்சர் தற்போது கூறியுள்ளார்.

அண்­மைக்­கா­ல­மாக முத­ல­மைச்சர் கூறிய கருத்­துக்­களை வர­வேற்­கின்றோம். இதனை பகி­ரங்­க­மா­கவே வர­வேற்­கின்றோம் ஏனெனில் இதனை நாம் 5 வரு­டங்­க­ளாக கூறி­வந்­தி­ருக்­கின்றோம். நங்கள் தமிழ்த்­தே­சியக் கூட்­ட­மைப்பில் இருந்து வெளியே­றி­ய­மைக்­கான கார­ணமே தமிழ்­தே­சிய கூட்­ட­மைப்பு தலை­மைகள் மேற்­கு­றிப்­பிட்ட விட­யங்­களில் செயற்­பட தயா­ராக இல்லா மையேயாகும் ஆகவே கூட்­ட­மைப்பில் இருந்தது விலகி தனி­யாக செயற்­பட்­டி­ருக்­கின்றோம்.

முத­ல­மைச்சர் 2013 ஆண்டு காலத்தில் அர­சி­ய­லிற்குள் நுழை­கிறார். அந்த காலம் முதல் அவ­ரு­டைய கருத்து வேறா­கவே இருந்­துள்­ளது. மிக அண்­மைக்­கா­ல­மாக வித்­தி­யா­ச­மான குறிப்­பாக தமிழ் தேசியக் கூட்­ட­மைப்பு தலை­மைகள் கூறுகின்ற கருத்­துக்­களை விட வித்­தி­யா­ச­மான கருத்­துக்­களை கூறி­வ­ரு­கின்றார்.

இது மன­மாற்­ற­மாக இருக்­கலாம். அர­சி­யலில் அனு­ப­வ­மில்­லாத நபர் சட்­ட­ரீ­தி­யாக அனு­பவம் வாய்ந்­தவர் அர­சியல் அனு­பவம் பெற்று பல விட­யங்­களில் அனு­பவம் பெற்­ற­பிற்­பாடு அவ­ரு­டைய கருத்­து­களில் மாற்றம் ஏற்­பட்­ட­தாக இருக்­கலாம்.

அர­சியல் கட்சி என்ற வகையில் தமிழ் தேசியக் கூட்­ட­மைப்­பி­னு­டைய செயற்­பா­டுகள் கடந்த காலங்­களில் விசே­ட­மாக ஜனா­தி­பதி தேர்­தலில் நிபந்­த­னை­யற்ற ஆத­ரவு அதன்பின் சிங்­கள தேசத்தின் சுதந்­திர தினத்தில் கலந்து கொண்­டது போன்­றவை தமிழ் தேசத்­தி­னு­டைய நலன்­களை முற்­றாக உதா­சீனம் செய்யும் வகையில் இருந்­த­மையால் மக்கள் மத்­தியில் கடும் அதி­ருப்தி ஏற்­பட்­டுள்­ளது.

மேலும் இன்னும் சிறிது காலத்தில் பாரா­ளு­மன்ற தேர்தல் வர­வுள்ள நிலையில் இக்­க­ருத்து கூறப்­பட்­டுள்­ளது. நாங்கள் முத­ல­மைச்சர் மாகா­ண­ச­பையில் இன அழிப்பு தீர்­மா­னத்தை நிறை­வேற்­றிய போது முத­லா­வ­தாக அதனை வர­வேற்றோம். இதனை பகி­ரங்­க­மாக கூறி­யு­முள்ளோம். மக்­களால் தெரிவு செய்­யப்­பட்ட முத­ல­மைச்சர் இருக்­கின்ற கட்­சியின் தலைமை இந்த தீர்­மா­னத்தில் தெரி­விக்­கப்­பட்ட கருத்­துக்­க­ளுக்கு நேர் எதி­ராக செயற்­பட்டு வரு­கின்­றது.

அந்த தீர்­மா­னத்தில் கடைசி பந்­தியில் கூறப்­பட்டு இருப்­பது மஹிந்­த ­ரா­ஜ­பக் ஷ அர­சாங்­கத்­தையோ, மைத்­தி­ரி­பால அர­சாங்­கத்­தையோ அல்­லது சிங்­கள தேசத்தால் நிய­மிக்­கப்­ப­டு­கின்­ற அர­சாங்­கத்­தையோ நம்ப முடி­யாது. இதுவே முதல­மைச்­சரின் பிரே­ர­ணையின் சாராம்­ச­மாகும். இதற்­கா­கவே முழு­மை­யாக சர்­வ­தேச விசா­ரணை நடத்­தப்­பட வேண்டும் என்ற நியா­யத்தை எடுத்து காட்­டி­யுள்­ளது.

இந்த தீர்­மானம் நிறை­வேற்­றப்­பட்ட 6 நாட்களுக்கு முன்­ப­தாக கட்சி தலை­வரும் தலை­வ­ருக்கு நெருங்கி செயற்­படும் தேசி­யப்­பட்டியல் எம்.பி.யும் சுதந்­திர தினத்தில் கலந்­து­கொண்­ட­பின்னர் அதனை ஒரு எம்.பி. 43 வரு­ட­கா­ல­மாக கடைப்­பி­டித்த ஒரு செயல்­பாட்டை மீறி ­நி­யாயப் படுத்­து­கிறார். எங்­க­ளுக்கு இந்த அர­சாங்­கத்தில் முழு­மை­யான நம்­பிக்கை இருக்­கி­றது என்றும் கூறி­யுள்ளார். அவ்­வாறு என்றால் மக்­களால் தெரிவு செய்­யப்­பட்ட முத­ல­மைச்சர் வட­மா­காண சபையில் நிறை­வேற்­றிய இன­ அ­ழிப்பு தீர்­மா­னத்­திற்கு நேர் எதி­ராக செயற்­ப­டு­கி­றார்கள் என்றால் இது தேர்தல் நாடகம் இல்லை என்று நிரூ­பிப்­ப­தற்கு முத­ல­மைச்சர் இரண்டில் ஒன்று செய்­ய­வேண்டும்.

ஒன்று தமிழ் தேசிய கூட்­ட­மைப்பின் தலை­மையை நீக்கி முத­ல­மைச்சர் கட்சி தலை மையை பொறுப்­பேற்க வேண்டும் அல்­லது அவ­ரு­டைய சிந்­த­னையில் இருக்­கின்ற நபர்கள் கட்சித் தலை­மையில் இருக்­க­வேண்டும். அல்­லது தமிழ் தேசிய கூட்­ட­மைப்பில் இருந்து வெளியேறி இந்த கொள்­கையை முன்­னி­லைப்­ப­டுத்தி தனித்­து­வ­மாக செயற்பட வேண்டும்.

தனித்­து­வ­மாக செய்யப்படும் பட்­சத்தில் தமிழ்­தே­சிய மக்கள் முன்­னணி இணைந்து செயற்­பட தயா­ரா­கவே இருக்­கின்றது. இதனை செய்­யாது வெறு­மனே கருத்­துக்­களை தெரி­விப்­பது எம்மைப் பொறுத்­த­வ­ரையில் உண்­மை­யான தேசிய உணர்­வு­க­ளுடன் இருக்கக் கூடிய பெரும்­பான்­மை­யான மக்கள், தமிழ் தேசிய மக்கள் முன்­ன­ணி­யுடன் சேராது அவர்­களை தடுத்து கூட்டமைப்புக்குள்ளும் இந்த கருத்து இருக்கின்றது எங்களுக்கு வாக்களியுங்கள் என்று கூறி வாக்குகளை பெற்று நேர் எதிராக செயற்படும் தலைமைக்கு வழங்குவதாகவே இது பார்க்கப்படும்.

அப்­ப­டித்தான் இருப்­பது என்றால் இத்­த­கைய செயற்­பாடு அனைத்தும் அயோக்­கி­யத்­த­ன­மா­ன­தாக இருக்கும். இதை தவிர்த்து முத­ல­மைச்சர் நேர்­மை­யாக செயற்­ப­டு­வ­தாக இருந்தால் கட்சி தலைமையை பொறுப் பெடுக்­க­வேண்டும் அல்­லது அதே நிலைப்­பாட்டில் இருக்கும் தலை­மையை இணைத்து கட்சி தலை­மையை எடுக்க வேண்டும் அல்­லது கட்­சியில் இருந்து வெளியேறி எம்­முடன் இணைந்து செயற்பட வேண்டும் என்றார்.