செய்திகள்

உணர்வெழுச்சியுடன் அனுஷ்டிக்கப்படும் 16ஆம் ஆண்டு முள்ளிவாய்க்கால் நினைவேந்தல்!

முள்ளிவாய்க்கால் நினைவேந்தல் நிகழ்வு வடக்கு, கிழக்கில் உணர்வெழுச்சியுடன் முன்னெடுக்கப்பட்டு வருகின்றது.

2009ஆம் ஆண்டு போரின் இறுதியில் நிகழ்ந்தேறிய மனிதப்பேரவலத்தினை நினைவுகூரும் வகையில் ஆண்டுதோறும் மே -18ஆம் திகதி நினை வேந்தல் நிகழ்வு நடத்தப்படும்.

அந்தவகையில் இம்முறையும் 16ஆம் ஆண்டு பூர்த்தியை முன்னிட்டு, வடக்கு, கிழக்கு மற்றும் கொழும்பில் பல்வேறு நினைவேந்தல் நிகழ்வுகளுக்கு ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன.

பிரதான நிகழ்வு அந்தவகையில் முள்ளிவாய்க்கால் நினைவேந்தல் பொதுக்கட்டமைப்பின் ஏற்பாட்டில் பிரதான நினைவேந்தல் நிகழ்வு முள்ளிவாய்க்கால் நினைவுத்திடலில் முன்னெடுக்கப்படவுள்ளது.
காலை 10.15இற்கு கொள்கைப்பிரகடனம் வாசிக்கப்பட்டுரூபவ் 10.29இற்கு நினைவொலி எழுப்பப்படும். 10.30இற்கு அகவணக்கம் செலுத்தப்பட்டு தொடர்ந்து பொதுச்சுடர் ஏற்றப்படும்.

பொதுச்சுடர் ஏற்றப்படும் சமநேரத்தில் ஒற்றைச்சுடர் ஏற்றப்படவுள்ளதோடு, அதனையடுத்து மலர் அஞ்சலி செலுத்துவதுடன் நினைவேந்தல் நிகழ்வு முடிவுக்கு வரவுள்ளது.

பொதுக்கட்டமைப்பின் இணைத்தலைவர் அருட்பணி சின்னத்துரை லியோ ஆம்ஸ்ரோங் தெரிவிக்கையில்,
எமக்கு இழைக்கப்பட்ட அநீதிக்கு எதிராக குரல் கொடுக்கவும்ரூபவ் அநீதிக்கு நீதி வேண்டியும் மே 18ஆம் நாளில் அணி திரளுமாறு அழைத்து நிற்கின்றோம்.
தமிழின படுகொலையின் நாளாகிய மே 18 தினத்தில் நாம் அனைவரும் திரளாக ஒன்றுகூடி எமக்கு இழைக்கப்பட்ட அநீதிக்கு எதிராக குரல் கொடுக்கவும் ரூபவ் அந்த அநீதிக்கு நீதி வேண்டியும் படுகொலை செய்யப்பட்ட மக்களை நினைவு கூரவும் ஒன்றுகூட அழைத்து நிற்கின்றோம்.

அனைவரும் வருகை தந்து எமது இனத்திற்கு எதிராக இழைக்கப்பட்ட அநீதிக்கு எதிராக நாம் குரல் கொடுப்போம் கொத்து கொத்தாக கொல்லப்பட்ட மக்களை நினைவு கூருவோம். நாம் அழிக்கப்பட்டோம் என்கின்ற அந்த விடயத்தை சர்வதேசம் வரை உரத்து சொல்வதற்காக இணைந்து கொள்வோம் என்றார்.