செய்திகள்

17 வீரர்களுக்கு சீருடைகள், பாதனிகள் கையளிப்பு

கொட்டகலை தமிழ் மகாவித்தியாலய உதைப்பந்தாட்ட 17 வீரர்களுக்கு சீருடைகள், பாதனிகள் என்பனவற்றை நுவரெலியா மாவட்ட பாராளுமன்ற உறுப்பினரும், இலங்கை தொழிலாளர் காங்கிரஸின் பொதுச் செயலாளருமான ஆறுமுகன் தொண்டமான் மற்றும் இ.தொ.காவின் தலைவர் முத்துசிவலிங்கம் ஆகியோர்களால் உதைப்பந்தாட்ட வீரர்களுக்கு கையளிக்கப்பட்டது.

அதேவேளை கொட்டகலைதமிழ் மகாவித்தியாலய உதைப்பந்தாட்ட அணியினருக்கும், கொழும்பு வெஸ்லிகல்லூரி அணியினருக்கும் இடையிலான உதைப்பந்தாட்டபோட்டி எதிர்வரும் 28ல் மொரகஸ்முல்ல விளையாட்டு மைதானத்தில் இடம்பெறவுள்ளதென்பது குறிப்பிடத்தக்க விடயமாகும்.

DSC_0435 DSC_0404