செய்திகள்

19ஆவது திருத்தம் தேசிய இனப்பிரச்சினைக்கு தீர்வாகிவிடாது

19ஆவது திருத்தம் தேசிய இனப்பிரச்சினைக்கு தீர்வாகிவிடாது. அப்படியான ஒரு திருத்தமாக 19ஆவது திருத்தச் சட்டத்தை நாம் அதனை எதிர்ப்பார்க்கவில்லை.

ஆனாலும் நாட்டில் சிலபல மாற்றங்கள் ஏற்படவேண்டும் என்ற வகையில் 19ஆவது திருத்தச் சட்டத்துக்கு ஆதரவு தெரிவிக்கின்றோம்.

இவ்வாறு தமிழ் தேசியக் கூட்டமைப்பின் தலைவர் சம்பந்தன் தெரிவித்தார்.

19ஆவது திருத்தச் சட்டம் தொடர்பாக முடிவைப்பெற ஜனாதிபதி இன்று ஏற்பாடு செய்திருந்த கூட்டம் பற்றி ஊடகங்களுக்கு மேற்கண்டவாறு தெரிவித்தார்.