செய்திகள்

19ஆவது திருத்தம், பாராளுமன்ற ஒழுங்குப்பத்திரத்தில் உள்ளடக்கப்பட்டதன் பின்னர் வழக்கு

19ஆவது திருத்தம், பாராளுமன்ற ஒழுங்குப்பத்திரத்தில் உள்ளடக்கப்பட்டதன் பின்னர் அதற்கு எதிராக உயர்நீதிமன்றத்தில் மனுவொன்றை தாக்கல் செய்யவுள்ளதாக மேல் மாகாண சபையின் உறுப்பினரும் பிவித்துரு ஹெல உருமய கட்சியின் செயலாளருமான  உதய கம்மன்பில தெரிவித்துள்ளார்.

19 ஆவது திருத்தத்தை நிறைவேற்றுவதற்கு சர்வஜன வாக்கெடுப்பு நடத்தப்படவேண்டும்.

தற்போது முன்மொழியப்பட்டுள்ள 19 ஆவது திருத்தத்தின் படி ஜனாதிபதி, அரசாங்கம் மற்றும் நிறைவேற்று பிரதானியாக இருந்தாலும் அமைச்சரவையானது பிரதமர் தலைமையில் நடைபெறுவது, தகவலறியும் உரிமையை சட்டமாக்கல் ஆகிய விடயங்கள் இலங்கையின் தேசிய பாதுகாப்புக்கு அச்சுறுத்தலாக அமையும் என அவர் தெரிவித்தார்.