செய்திகள்

19ஆவது திருத்த சட்டம் மூன்றில் இரண்டு பெரும்பான்மை வாக்குகளால் நிறைவேற்றம்

19வது அரசியலமைப்பு திருத்தம் 215 ஆதரவான வாக்குகளால் நிறைவேற்றப்பட்டுள்ளது.
ஆதரவாக 215 பேரும் எதிராக ஒருவரும் , நடுநிலையக ஒருவரும் வாக்களித்ததுடன் 7பேர் வாக்களிப்பதற்காக பாராளுமன்றத்துக்கு சமூகமளித்திருக்கவில்லை.
இதன்படி வாக்களிப்பின் போது சபையில் இருந்த 217 பேரில் ஸ்ரீ லங்கா சுதந்திரக் கட்சி எம்.பியான சரத் வீரசேகர மாத்திரம் எதிர்த்து வாக்களித்ததுடன் ஜனநாயக கூட்டமைப்பு எம்.பியான அஜித் குமார வாக்களிப்பதிலிருந்து விலகியிருந்தார்.
இதேவேளை ஸ்ரீ லங்கா சுதந்திரக் கட்சி உட்பட ஐக்கிய மக்கள் சுதந்திரக் கூட்டமைப்பின் மஹிந்த ராஜபக்ஷவுக்கு ஆதரவான சகல எம்.பிக்களும் 19க்கு ஆதரவாக வாக்களித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.