செய்திகள்

19ஐ நிறைவேற்றக் கோரி சோபித்த தேரர் உள்ளிட்ட குழு சத்தியாக்கிரக போராட்டத்திற்கு திட்டம்

19வது அரசியலமைப்பு திருத்தத்தை பாராளுமன்றத்தில் நிறைவேற்றுமாறு வலியுறுத்தி சமூக நீதிக்கான மக்கள் இயக்கத்தின் ஏற்பாட்டாளர் மாதுலுபாவே சோபித்த தேரர்உள்ளிட்ட குழுவொன்று இன்று கொழும்பிலுள்ள சுதந்திர சதுக்க வளாகத்தில் தொடர் சத்தியாக்கிரக போராட்டமொன்றை ஆரம்பிக்கவுள்ளனர்.
இன்று காலை 10 மணி முதல் இந்த சத்தியாக்கிரக போராட்டம் ஆரம்பமாகவுள்ளதாக பிரஜைகள் அமைப்புகளின் கூட்டணி தெரிவித்துள்ளது.
19க்கு ஆதரவாக பாராளுமன்றத்துக்கு அருகில் இன்று காலை நடைபெறவுள்ள ஆர்ப்பாட்ட பேரணியின் பின்னரே இந்த சத்தியாக்கிரக போராட்டம் நடத்தப்படுமென அந்த கூட்டணி தெரிவித்துள்ளதுடன் 19வது திருத்தம் பாராளுமன்றத்தில் நிறைவேற்றப்படும் வரை குறித்த போராட்டம் நடத்தப்படுமெனவும் தெரிவித்துள்ளது.
19வது அரசியலமைப்பு திருத்தத்தை இன்றும் நாளையும் விவாதத்திற்கு எடுத்துக் கொள்ளவும் நாளைய தினம் அதனை நிறைவேற்றுவதற்கும் அரசாங்கம் திட்டமிட்டுள்ள போதும் அதனை நிறைவேற்றுவதில் சிக்கல்கள் ஏற்படலாம் என சந்தேகிக்கப்படும்நிலையிலேயே இந்த போராட்டம் நடைபெறவுள்ளது.