செய்திகள்

19ஐ நிறைவேற்றக் கோரி பாராளுமன்றத்துக்கு முன்னால் இன்று பாரிய ஆர்ப்பாட்டம்

19வது அரசியலமைப்பு திருத்தத்திற்கு ஆதரவாக சிவில் அமைப்புகள் பல ஒன்றிணைந்து இன்று பாராளுமன்றத்துக்கு முன்னால் ஆர்ப்பாட்ட பேரணிகளை நடத்த தீர்மானித்தள்ளன.
இதன்படி இன்று காலை 9 மணியளவில் ராஜகிரிய சந்திக்கு அருகிலிருந்து பேரணியை நடத்த திட்டமிட்டடுள்ள சிவில் அமைப்புகள் பாராளுமன்ற சுற்றுவட்டம் வரை சென்று ஆர்ப்பாட்டத்தில் ஈடுபடவுள்ளவுள்ள தாக ஏற்பாட்டுக்குழுவினர் தெரிவித்துள்ளனர்.
19வது திருத்தத்தை நிறைவேற்ற விடாது சில சக்திகள் சூழ்ச்சிகளை முன்னெடுக்கும் நிலையில் அந்த சூழ்ச்சிகளை தோற்கடித்து 19ஐ நிறைவேற்றுமாறு கோரியே இந்த ஆர்ப்பாட்ட பேரணி நடத்தப்படவுள்ளதாகவும் இதில் கட்சிப் பேதமின்றி பல சிவில் அமைப்புகளின் பிரதிநிதிகள் கலந்துக் கொள்ளவுள்ளதாக ஏற்பாட்டுக்குழுவினர் தெரிவித்துள்ளனர்.