செய்திகள்

19ஐ நிறைவேற்ற உதவிய சகலருக்கும் நன்றி : ஜனாதிபதி

19வது திருத்தத்தை நிறைவேற்ற உதவிய அனைவருக்கும் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன நன்றி தெரிவித்துள்ளார்.
19திருத்தம் நேற்று இரவு நிறைவேற்றப்பட்டதை தொடர்ந்தே ஜனாதிபதி இவ்வாறு நன்றி தெரிவித்துள்ளார்.
இந்த வரலாற்று ரீதியான வெற்றியை பெற்றுக்கொள்வதற்காக 37 வருடங்களாக பல்வேறு போராட்டங்களில் ஈடுபட்ட , சட்ட மூலத்தை பாராளுமன்றத்தில் சமர்ப்பிக்க ஒத்துழைப்பு வழங்கிய மதத் தலைவர்கள் அடங்களாக சகல பிரஜைகள் , கட்சிகள் , சிவில் அமைப்புகள் மற்றும் பாராளுமனற உறுப்பினர்கள் அடங்களாக சகல தரப்பினருக்கும் ஜனாதிபதி தனது நன்றியை தெரிவித்துக்கொண்டுள்ளார்.
இதேவேளை இந்த வெற்றி எதிர்கால சந்ததியினருக்கான வெற்றியாக கருதுவதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.