செய்திகள்

19ஐ நிறைவேற்ற முடியாவிட்டால் பாராளுமன்றத்தை கலைப்பதே சிறந்தது : அஜித் பீ பெரேரா

19வது அரசியலமைப்ப திருத்தத்தை நிறைவேற்ற முடியாது போகுமாகவிருந்தால் பாராளுமன்றத்தை கலைப்பதை தவிர வேறு வழியில்லையென வெளி விவகார பிரதியமைச்சர் அஜித் பீ பெரேரா தெரிவித்துள்ளார்.
நேற்று அரசாங்க தகவல் திணைக்களத்தில் நடைபெற்ற செய்தியாளர் சந்திப்பிலேயே அவர் இதனை தெரிவித்துள்ளார்.
19வது திருத்தத்தை நிறைவேற்றுவதற்காக பாராளுமன்றத்தில் மூன்றில் இரண்டு பெரும்பான்மையை பெற்றுக்கொடுக்கும் பொறுப்பு ஜனாதிபதியுடையது. இந்நிலையில் 19ஐ நிறைவேற்ற முடியாது போனால் பாராளுமன்றத்தை கலைப்பதை தவிர வேறு வழியில்லை. என அவர் தெரிவித்துள்ளார்.