செய்திகள்

19க்கு எதிராக வாக்களித்துவிட்டு ஊருக்கு வர நினைக்க வேண்டாம். சோபித்த தேரர் எம்.பிகளுக்கு எச்சரிக்கை

19வது திருத்தத்திற்கு எதிராக யாரேனும் வாக்களிப்பீர்களாக இருந்தல் அவர்கள் தங்களின் ஊர் பக்கம் செல்வதற்கு எண்ணவேண்டாமென 225 பாராளுமன்ற உறுப்பினர்களுக்கும் சமூக நீதிக்கான மக்கள் இயக்கத்தின் ஏற்பாட்டாளர் சோபித்த தேரர் அறிவித்தல் விடுத்துள்ளார்.
19வது திருத்தத்தை நிறைவேற்றுமாறு வலியுறுத்தி இன்று பாராளுமன்றத்துக்கு முன்னாள் நடத்தப்பட்ட ஆரப்பாட்டத்தின் போது ஆர்ப்பாட்டக்காரர்களுக்கு மத்தியில் உரையாற்றுகையிலேயே அவர் இந்த அறிவிப்பை விடுத்தார்.
35 வருடங்களாக நிறைவேற்று ஜனாதிபதி முறைமையால் துன்பங்களை அனுபவித்த வந்ந மக்கள் 19வது திருத்தம் எப்போது நிறைவேற்றப்படுமென பார்த்துக்கொண்டிருக்கின்றனர்.  இந்நிலையில் அதற்கு எதிராக வாக்களித்து விட்டு ஊர் திரும்ப வேண்டாமென சகல பாராளுமன்ற உறுப்பினர்களையும் கேட்டுக்கொள்கின்றேன். என அவர் தெரிவித்துள்ளார்.