செய்திகள்

19க்கு சவால் விடுத்து நீதி மன்றத்தில் 8 மனுக்கள்

19வது அரசியலைமைப்பு திருத்தத்திற்கு சவால்விடுக்கும் வகையில் பல்வேறு தரப்பினரால் இது வரை 8 மனுக்கள் உயர் நீதி மன்றத்தில் தாக்கல் செய்யப்பட்டுள்ளன.

குறித்த அரசியலமைப்பு திருத்தத்தில் சில திருத்தங்களை நிறைவேற்றும் போது பாராளுமன்றத்தில் பெற்றுக் கௌ;ளும் மூன்றில் இரண்டு பெரும்பான்மை அங்கீகாரத்துக்கு மேலதிகமாக மக்கள் அபிப்பிராயத்தை பெற்றுக்கொள்ளும் வகையில் சர்வஜன வாக்கெடுப்பு நடத்தப்பட வேண்டுமென அறிவிக்குமாறு கோரியே நீதி மன்றத்தில் இந்த மனுக்கல் தாக்கல் செய்யப்பட்டுள்ளதாக தெரிய வருகின்றது.

சிரேஸ்ட சட்டத்தரணி கோமிஸ் தயாசிறி , சட்டத்தரணி உதய கம்மன்பில மற்றும் பொங்கமுவே நாலக்க தேரர் உட்பட 8 பேரினால் இந்த மனுக்கல் தாக்கல் செய்யப்பட்டுள்ளன. இந்த மனுக்கள் எதிர்வரும் 2ம் திகதி நீதிமன்றத்தினால் ஆராயப்படவுள்ளன.