செய்திகள்

19வது திருத்தத்தில் சபாநாயகர் கையொப்பமிட்டார்: ஜனாதிபதியின் அதிகாரங்கள் இன்று முதல் குறைகின்றது

19வது அரசியலமைப்பு திருத்தத்தில் சபாநாயகர் இன்று கையொப்பமிட்டுள்ளார். இதன்படி இன்று முதல் அந்த திருத்தம் செயற்பாட்டுக்கு வந்துள்ளது.
இன்று காலை 9 மணியளவில் அவர் அந்த திருத்தத்தில் கையொப்பமிட்டுள்ளதாக பாராளுமன்ற செயலாளர் தம்மிக்க தசநாயக்க தெரிவித்துள்ளார்.
ஜனாதிபதியின் ஆதகாரங்களை குறைத்தல் உள்ளிட்ட விடயங்கள் அடங்கிய 19வது திருத்தம் கடந்த 28ம் திகதி பாராளுமன்றத்தில் நிறைவேற்றப்பட்டமை குறிப்பிடத்தக்கது.