செய்திகள்

19வது திருத்தத்தை எதிர்க்க எதிர்க் கட்சி தீர்மானம் : விவாதம் தொடர்பாக இன்று தீர்மானிக்கப்படும்

19வது அரசியலமைப்பு திருத்தத்திற்கு ஆதரவாக வாக்களிக்காமலிருப்பதற்கு ஸ்ரீ லங்கா சுதந்திரக்கட்சி தலைமையிலான ஐக்கிய மக்கள் சுதந்திரக் கூட்;டமைப்பு தீர்மானித்துள்ளது.
நேற்று மாலை பாராளுமன்ற கட்டிடதொகுதியில் நடைபெற்ற கட்சி தலைவர்களின் கூட்டத்தின் போது இந்த தீர்மானம் மெற்கொள்ளப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
இந்நிலையில் 19வது திருத்தம் தொடர்பான விவாதத்தை இன்றும் நாளையும் சபையில் நடத்துவதா இல்லையா என்பது தொடர்பாக மீண்டும் இன்று காலை நடைபெறவுள்ள கட்சித் தலைவர்களின் கூட்டத்திலேயே தீர்மானிக்கப்படவுள்ளது.
இதேவேளை எதிர்க்க கட்சியினர் எதிர்த்தாலும் பரவாயில்லை திட்டமிட்டப்படி இன்றைய தினம் 19வது திருத்தம் விவாதத்திற்கு எடுத்துக்கொள்ளப்படுமென அரசாங்கம் தெரிவித்துள்ளது.