செய்திகள்

19வது திருத்தத்தை தேர்தல் திருத்தத்துடன் நிறைவேற்ற திட்டம்

19வது அரசியலமைப்பு திருத்தம் எதிர்வரும் 20ம் திகதி பாராளுமன்றத்தில் சமர்ப்பிக்கப்படவுள்ள போதும் அதனை உடனடியாக நிறைவேற்றாது தேர்தல் முறை திருத்தத்துடன் நிறைவேற்றுவதற்கு ஆராயப்பட்டு வருவதாக தெரிய வருகின்றது.
ஸ்ரீ லங்கா சுதந்திரக் கட்சி உடபட சில கட்சிகள் தேர்தல் முறைமை மாற்றப்பட்ட பின்னரே 19வது திருத்தம் நிறைவேற்ற வேண்டுமென்ற நிலைப்பாட்டில் இருக்கும் நிலையிலேயே இது தொடர்பாக ஆராயப்பட்டு வருகின்றது.
இதன்படி 20வது திருத்தமாக தேர்தல் முறை திருத்தத்தை இந்த மாதத்திற்குள் பாராளுமன்றத்தில் சமர்ப்பித்து இரண்டையும் ஒரே நேரத்தில் நிறைவேற்றுவதற்கு திட்டமிடப்படுவதாக தெரிய வருகின்றது.
19 வது திருத்தம் நிறைவேற்றப்பட்ட பின்னர் பாராளுமன்றம்; கலைக்கப்படுமென ஜனாதிபதி அண்மையில் அறிவித்திருந்தார். என்பது குறிப்பிடத்தக்து.