செய்திகள்

19வது திருத்தத்தை நிறைவேற்றுவதில் சிக்கல்

19வது அரசியலமைப்பு திருத்தத்;தை அவசரமாக நிறைவேற்றுவதற்கு ஐக்கிய தேசிய கட்சி தலைமையிலான அரசாங்கம் முயற்சித்து வரும் நிலையில் ஸ்ரீ லங்கா சுதந்திரக் கட்சியோ தேர்தல் திருத்தமின்றி அதனை நிறைவேற்ற முடியாது என்ற உறுதியான நிலைப்பாட்டில் இருக்கின்றது.
அப்படி நிறைவேற்றுவதென்றால் தாம் முன்வைக்கும் சில திருத்தங்களுடன் அதனை நிறைவேற்ற வேண்டும் ஆனால் தேர்தல் திருத்தம் நிறைவேற்றப்படம் வரை 19ஐ செயற்படுத்தக் கூடாது என ஸ்ரீ லங்கா சுதந்திரக்கட்சி நிபந்தனைகளை விதித்துள்ளது. இதனால் புதிய அரசியலமைப்பு திருத்தத்தை நிறைவேற்றுவதில் சிக்கல் நிலைமையேற்பட்டுள்ளது.
19வது அரசியலமைப்பு திருத்தத்தையும் தேர்தல் முறை திருத்தத்தையும் ஒரே காலப்பகுதியில் நடைமுறைபடுத்துவதாக இருந்தால் மட்டுமே 19வது திருத்;தத்தை ஆதரிப்போம் என எதிர்க் கட்சி தலைவர் நிமல் சிறிபால டி சில்வா தெரிவித்துள்ளார்.
இதேவேளை 19வது திருத்தத்தில் சட்டத்திற்கு முரனான வகையில் அரசாங்கம் 12 பக்கங்களை கொண்ட திருத்தங்களை மேற்கொண்டுள்ளதாவும் இதனால் இது தொடர்பான விவாதம் ஒத்திவைக்கப்பட வேண்டுமென கட்சித் தலைவர்கள் கூட்டத்தில் சபாநாயகரிடம் வலியுறுத்தியுள்ளதாவும் அவர் நேற்று கொழும்பில் நடைபெற்ற ஊடகவியலாளர் மாநாடொன்றில் தெரிவித்துள்ளார்.
இந்நிலையில் 9 , 10ம் திகதிகளில் 19 தொடர்பான விவாதத்தை நடத்த தி;ட்டமிட்டுள்ளதாகவும் எவ்வாறாயினும் இது தொடர்பான உயர் நீதி மன்றத்தின் தீர்ப்பு வெளிவந்த பின்னரே தீர்மானமெடுக்கப்படுமெனவும் அரசாங்கத்தின் சார்பாக அமைச்சர் அஜித் பீ பெரேரா நேற்று தெரிவித்துள்ளார்.
இதேவேளை நேற்று மாலை உயர் நீதிமன்றம் தனது தீர்ப்பை சபாநாயகருக்கு அனுப்பி வைத்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.